விழுப்புரத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 March 2022 11:40 PM IST (Updated: 10 March 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சித்தலிங்கமடத்தை சேர்ந்த 7 இருளர்கள் மீது மயிலம் போலீஸ் நிலையத்தில் பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்தும், இருளர்கள் மீது திருட்டு வழக்கு சுமத்தும் காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். 

ஒருங்கிணைப்பாளர் பிரபாகல்விமணி, தலைவர் இளங்கோவன், பொதுச்செயலாளர் ஆறுமுகம், துணைத்தலைவர் ஆதிமூலம், துணை செயலாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துரை.ரவிக்குமார் எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, ம.தி.மு.க. மாநில தீர்மானக்குழு உறுப்பினர் நரசிம்மன், கல்வி ஆலோசகர் வக்கீல் லூசினா, திட்ட இயக்குனர் ரபேல்ராஜ், கைவினைஞர் முன்னேற்ற கழக தலைவர் பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் நிர்வாகிகள் ஆல்பர்ட் வேளாங்கண்ணி, முருகேசன், பூபால், முருகப்பன், அந்தோணிகுரூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story