கெடாா் சுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்
கெடாா் சுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனா்.
விழுப்புரம்,
விழுப்புரத்தை அடுத்த கெடார் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சூரசம்ஹார திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 8-ந் தேதி மாலை கம்பம் ஏறுதலும், இரவு 10 மணிக்கு முத்துப்பல்லக்கில் சாமி வீதிஉலாவும், அதன் பிறகு சூரசம்ஹாரத்தையொட்டி சூரனுக்கு சாமி காட்சி தருதலும், வேலுக்கு பாலாபிஷேகமும் நடந்தது.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சுப்பிரமணியசாமி திருக்கல்யாணமும், நள்ளிரவு 12 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு மலர் அலங்காரத்தில் சாமி, தெப்பத்தில் எழுந்தருளியவுடன் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை செங்குந்த மரபினரும் மற்றும் கெடார் பகுதி பொதுமக்களும் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story