தொழிலாளர்கள், போலீசார் இடையே தள்ளு முள்ளு
தொழிலாளர்கள், போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்கக்கூடாது என்ற நிர்வாக அறிவிப்பை மீறி தொழிற்சங்கம் அமைத்ததாகவும், அதன்காரணமாக 7 தொழிலாளர்கள் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இருதரப்பையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த மதுரை தொழிலாளர் உதவி ஆணையாளர், 7 தொழிலாளர்களின் இடமாற்றத்தை ரத்து செய்யவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்தவும் அறிவுறுத்தியதாகவும், அதனை நிர்வாகம் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. சின்னத்துரை தலைமையில் சிங்கம்புணரி பஸ் நிலையம் அருகே தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடனும், 5-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினருடனும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ஊர்வலமாக சென்று தொழிற்சாலைக்குள் நுழைய முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ேபாலீசார் தடுப்பு அமைத்து அவர்களை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த ஆர்.டி.ஓ. பிரபாகரன், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாதன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் நிறைவு பெற்றது.
Related Tags :
Next Story