கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்-தேரோட்டம் 18-ந்தேதி நடக்கிறது


கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்-தேரோட்டம் 18-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 10 March 2022 11:49 PM IST (Updated: 10 March 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

பங்குனி திருவிழாவையொட்டி கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

கரூர், 
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
இதையொட்டி கல்யாண பசுபதீஸ்வரருக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
கொடியேற்றம்
அதனைத்தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின்னர் கோவிலில் உள்ள கொடி கம்பத்திற்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர் மேளதாளங்கள் முழங்க பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் காலை 10.45 மணியளவில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கும், கொடிகம்பத்திற்கும் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.  இதில் கரூர், திருமாநிலையூர், தாந்தோணிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை)  தேரோட்டம் நடைபெறுகிறது. பங்குனி திருவிழாவையொட்டி தினமும் காலை 7 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. மேலும் நால்வர் அரங்கில் ஆன்மிக சொற்பொழிவும், இசைநிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத் தினர் செய்து வருகின்றனர்.

Next Story