வெண்ணந்தூரில் நடிகர் சூர்யா பேனர் கிழிப்பால் பரபரப்பு


வெண்ணந்தூரில் நடிகர் சூர்யா பேனர் கிழிப்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 March 2022 11:54 PM IST (Updated: 10 March 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

வெண்ணந்தூரில் நடிகர் சூர்யா பேனர் கிழிப்பால் பரபரப்பு

வெண்ணந்தூர்:
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் உள்ள தியேட்டரில் நேற்று நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. இதற்காக நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் வெண்ணந்தூர் காமராஜர் சிலை அருகே வாழ்த்து பேனர் வைத்திருந்தனர். இந்த நிலையில் இதனை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கிழித்து விட்டனர். 
நேற்று காலை இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சூர்யா ரசிகர்கள் பேனர் கிளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதையொட்டி வெண்ணந்தூரில் உள்ள தியேட்டரில் போலீஸ் பாதுகாப்புடன் எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. பேனர் கிழிப்பு சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story