தடையை மீறி பேரணி; பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் கைது
1,500-க்கும் மேற்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி நடத்திய பேரணி பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி அருகிலிருந்து தொடங்கப்பட்டது. இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியானது பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் வந்தபோது தடையை மீறி வந்ததாக போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தி 1,500-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story