நகைக்காக பெண் கொலை?


நகைக்காக பெண் கொலை?
x
தினத்தந்தி 11 March 2022 12:04 AM IST (Updated: 11 March 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

திருப்பத்தூர், 
திருப்பத்தூரில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
பெண் மர்ம சாவு 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுத்தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவருடைய மனைவி ராமராக்கு என்கிற செல்வி (வயது 65). இவர் தனது மகன் ராஜாராம் என்பவருடன் வசித்து வந்தார். இந்தநிலையில்  ராஜாராம் தஞ்சாவூர் சென்று விட்டார். அங்கு சென்றதும் தனது தாயாரை செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் ெசய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களிடம் தகவல் சொல்லி பார்க்க சொன்னார். இதையடுத்து அவர்கள் அங்கு சென்று பார்த்த போது செல்வி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். 
இதுகுறித்து அவர்கள் ராஜாராமுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் அவரது உறவினர்கள் செல்வி அணிந்திருந்த மோதிரம், வளையல் மற்றும் வீட்டில் இருந்த நகை, பணம் திருடப்பட்டு இருப்பதாகவும், உடலில் காயம் இருப்பதாகவும், எனவே, நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீசில் புகார் தெரிவித்தனர். 
 கொலையா? 
இதைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைேரகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் மோப்ப நாய் லைகாவும் சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து கொண்டே மதுரை ரோடு வரை சென்று மீண்டும் சம்பவ இடத்துக்கு வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story