4 மாநில தேர்தலில் வெற்றி: பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
4 மாநில தேர்தலில் பா.ஜ.க.வினர் வெற்றி பெற்றதையடுத்து பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அன்னவாசல்:
பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்
உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி முதல், மார்ச் 7-ந்தேதி வரை தேர்தல் நடைபெற்றது. 5 மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பெரிதும் எழுந்தது. இந்நிலையில், 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. இதில் உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது.
இதையடுத்து, இலுப்பூர் பஸ் நிறுத்தம் அருகே அன்னவாசல் ஒன்றிய பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அத்துடன் சாலையில் செல்வோர், கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பொன்னமராவதி
இதேபோல் பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு பா.ஜ.க. சார்பில், 4 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கறம்பக்குடி
கறம்பக்குடி ஒன்றிய, நகர பாரதீய ஜனதா கட்சி சார்பில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து கறம்பக்குடி சீனிகடை முக்கம் பகுதியில் அக்கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். அப்போது பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.
கீரனூர், அறந்தாங்கி
குன்றாண்டார்கோவில் ஒன்றியம், கீரனூர் நகர பாரதீய ஜனதா கட்சி சார்பில் காந்தி சிலை முன்பு அக்கட்சியின் மாவட்ட பிறமொழி தொடர்பாளர் ராஜேந்திரன் தலைமையில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அறந்தாங்கியில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் புரட்சி கவிதாசன் தலைமையில், பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
Related Tags :
Next Story