ஆவூர் அருகே பட்டப்பகலில் சத்துணவு அமைப்பாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
ஆவூர் அருகே பட்டப்பகலில் சத்துணவு அமைப்பாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆவூர்:
நகை-பணம் திருட்டு
விராலிமலை தாலுகா, பேராம்பூரை சேர்ந்த சன்னப்பன் மகள் கவிதா குணவதி (வயது 38). மாத்தூரில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வரும் இவர் கணவரை விட்டு பிரிந்து பேராம்பூரில் தனியாக குடியிருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்ற கவிதா குணவதி பின்னர் மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் திருட்டு நடந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்த புகாரின்பேரில் மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story