டாஸ்மாக் கடை ஜன்னலை உடைத்த 2 பேர் கைது
மதுபானங்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடை ஜன்னலை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்,
தமிழக அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிவித்தது. இந்த நிலையில் சிதம்பரம் முத்துமாணிக்கம் நாடார் தெருவை சேர்ந்த சிவபெருமான் (வயது 27), கண்ணுகுடி வேலப்பாடி தெருவை சேர்ந்த அபி (22) ஆகியோர் மதுவாங்க கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கண்ணங்குடி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அப்போது அவர்கள் அங்கிருந்த கடையில் மேற்பார்வையாளரான கமலஹாசனிடம் (50) ஏன் மது விலையை உயர்த்தி அதிக விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் எள்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கைது
தொடர்ந்து அங்கிருந்த ஜன்னல்களை உடைத்து அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட சிவபெருமான் மற்றும் அபியை கைது செய்தனர். மதுபானங்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடை ஜன்னலை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story