இளைஞர்களுக்கான கலை போட்டிகள்


இளைஞர்களுக்கான கலை போட்டிகள்
x
தினத்தந்தி 11 March 2022 1:50 AM IST (Updated: 11 March 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர்களுக்கான கலை போட்டிகள் நடைபெற்றது.

பெரம்பலூர்:
திருச்சி மண்டல கலை பண்பாட்டுத்துறை சார்பில் 17 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கான பெரம்பலூர் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் மதனகோபாலபுரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நேற்று நடந்தது. போட்டிகளை இசைப்பள்ளி தலைமை ஆசிரியை ஹேமா தொடங்கி வைத்தார். குரலிசை, கருவியிசை ஆகிய போட்டிகள் காலையிலும், கிராமிய நடனம், ஓவியப்போட்டி ஆகியவை மதியமும் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அரசு இசைப்பள்ளி இளைஞர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் முதல் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.6 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 500-ம், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500-ம், மேலும் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. ேமலும் மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்த இளைஞர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அளவிலான போட்டிகளில் முதல் பரிசாக ரூ.30 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.

Next Story