வீடு புகுந்து நகை திருடிய 2 பேர் கைது


வீடு புகுந்து நகை திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 March 2022 2:02 AM IST (Updated: 11 March 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி அருகே வீடு புகுந்து நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டார்.

எடப்பாடி:-
எடப்பாடி அருகே உள்ள எல்லமடை சுண்ணாம்புகாரன் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 39), விவசாயி. இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 7-ந் இரவு கூரை வீட்டை பூட்டிவிட்டு பக்கத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று விட்டு மறுநாள் காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டை திறந்து பார்த்த போது, துணிமணிகள் சிதறி கிடந்தன. மேலும் வீட்டின் பின்புறம் உள்ள சிமெண்டால் செய்யப்பட்ட ஜன்னல் உடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் இருந்த 3 பவுன் நகையும் திருட்டு போய் இருந்தது. 
இது குறித்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கோவிந்தராஜ் வீட்டுக்குள் புகுந்து நகையை திருடியதாக  மூலப்பாதை பகுதியை சேர்ந்த சம்பத் (55) மற்றும் நெடுங்குளத்தை சேர்ந்த தினேஷ் குமார் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 3 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story