தாலுகாக்களில் மகப்பேறு ஆஸ்பத்திரி தொடங்க எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை-மந்திரி சுதாகர்


தாலுகாக்களில் மகப்பேறு ஆஸ்பத்திரி தொடங்க எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை-மந்திரி சுதாகர்
x
தினத்தந்தி 11 March 2022 2:25 AM IST (Updated: 11 March 2022 2:25 AM IST)
t-max-icont-min-icon

தாலுகாக்களில் மகப்பேறு ஆஸ்பத்திரி தொடங்க எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தப்படுவதாக மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் உறுப்பினர் சஞ்சீவ் மடந்தூர் கேட்ட கேள்விக்கு சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதிலளிக்கையில் கூறியதாவது:-
தாலுகாவுக்கு ஒரு மகப்பேறு ஆஸ்பத்திரி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனால் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி இது சாத்தியமில்லை. ஆனால் இதுபற்றி எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்படும். அரசு ஆஸ்பத்திரிகளில் மொத்தம் உள்ள 100 சதவீத படுக்கைகளில் 70 சதவீதம் கர்ப்பிணிகள் இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் வழிகாட்டுதல். அவ்வாறு இருந்தால் தான் தனியாக தாய்-சேய் மகப்பேறு ஆஸ்பத்திரி தொடங்க முடியும். 

பாகேபள்ளி தாலுகாவில் மகப்பேறு ஆஸ்பத்திரி அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்யப்படும். விஜயாப்புரா உள்பட 10 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசு-தனியார் பங்களிப்பில் மேற்கொள்ளப்படும். விஜயாப்புரா அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பல்நோக்கு உயர் ஆஸ்பத்திரி கட்டிட கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.
இவ்வாறு சுதாகர் கூறினார்.

Next Story