சேலத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பங்குகளை தனியாருக்கு விற்பதை கைவிடக்கோரி ேசலத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:-
பங்குகளை தனியாருக்கு விற்பதை கைவிடக்கோரி ேசலத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எல்.ஐ.சி. ஆர்ப்பாட்டம்
எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கைவிடக்கோரி நேற்று சேலம் காந்தி ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஊழியர்கள் கையில் மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு துணைத்தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், மாநில குழு உறுப்பினர் கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நாடு தழுவிய போராட்டம்
ஆர்ப்பாட்டத்தில் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க இணைச்செயலாளர் கலியபெருமாள், துணைத்தலைவர்கள் கலைச்செல்வி, ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கூட்டமைப்பு துணைத்தலைவர் தர்மலிங்கம் கூறும்போது ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் வருகிற 28, 29-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.
Related Tags :
Next Story