பவானி அருகே விபத்தில் புதுமாப்பிள்ளை பலி


பவானி அருகே விபத்தில் புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 11 March 2022 2:29 AM IST (Updated: 11 March 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

பவானி அருகே விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

பவானி
பவானி அருகே  விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். 
புதுமாப்பிள்ளை
பவானி அருகே உள்ள மயிலம்பாடி வாய்க்கால்பாளையம் மேல்காலனி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் அருண் (வயது 25). இவர் அந்த பகுதியில் சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். அருணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வசந்தி (22) என்ற      பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. 
சாவு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மயிலம்பாடியில் இருந்து கண்ணாடிபாளையம் செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 
கண்ணாடிபாளையம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அருண் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை      நடத்தி வருகிறார்கள். 
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் மயிலம்பாடி பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story