விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்


விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்
x
தினத்தந்தி 11 March 2022 2:35 AM IST (Updated: 11 March 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது.

ஆண்டிமடம்:
ஆண்டிமடம் வட்டாரத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை இடு பொருட்களான பழ மரக்கன்றுகள், ஊட்டச்சத்து காய்கறி தோட்ட விதை தொகுப்புகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ஒருங்கிணைந்த பண்ணையத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு, வேளாண் காடுகள் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வேளாண்மை செய்து நீடித்த நிலையான லாபம் அடையுமாறு விவசாயிகளை வலியுறுத்தினார். நிகழ்ச்சியின்போது வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி, வேளாண்மை அலுவலர் ராதிகா, துணை வேளாண்மை அலுவலர்கள் பாலுச்சாமி, ராஜேந்திரன் மற்றும் வேளாண்மை, தோட்டக்கலை உதவி அலுவலர்கள், இளநிலை ஆராய்ச்சியாளர் அபிலாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story