நாளை நடக்கிறது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) நடப்பதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொிவித்துள்ளாா்.
ஈரோடு
தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் முன் எச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டர்) இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமையொட்டி நாளை அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உட்பட 434 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசிகள் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களில் செலுத்தப்பட உள்ளது என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story