ஆவடியில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு


ஆவடியில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 11 March 2022 5:14 AM IST (Updated: 11 March 2022 5:14 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு நகைக்கடை, கோவிலிலும் கொள்ளை முயற்சி.

ஆவடி,

ஆவடி நந்தவனமேட்டூர் பகுதியில் உள்ள அப்பாஸ் ஜாகிர் (வயது 36) என்பவரது செல்போன் கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், கல்லாவில் இருந்த ரூ.25 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவை இருந்த பை மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை திருடிச்சென்றுவிட்டனர்.

மேலும் அதே நபர்கள், அருகில் உள்ள தேவராஜ் (42) என்பவரது மளிகை கடை பூட்டை உடைத்து சிகரெட் பாக்கெட், குளிர்பானங்கள் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை திருடினர். பின்னர் தரணிகுமார் (50) என்பவரது வாட்ச் கடை பூட்டை உடைத்து ரூ.17 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த வாட்ச் ஆகியவற்றையும் அள்ளிச்சென்றனர்.

மேலும் கொள்ளையர்கள் அருகில் உள்ள நகை கடை பூட்டையும், அங்குள்ள வினை தீர்க்கும் விநாயகர் கோவில் பூட்டையும் உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் தப்பிச்சென்றுவிட்டனர். இதுபற்றி ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நேற்று அதிகாலையில் கையில் இரும்பு கம்பி, கத்தி, டார்ச்லைட்டுடன் கொள்ளையர்கள் நடந்து வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story