சாலை விதிமுறைகள் மீறல்: 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து துறையினர் நடவடிக்கை
சாலை விதிமுறைகள் மீறல்: 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து துறையினர் நடவடிக்கை
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. இதையடுத்து நேற்று புதுச்சத்திரம் பகுதியில் நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போலீசார் வாகன சோதனையில் மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிள், கார், லாரி டிரைவர்களிடம் ஓட்டுனர் உரிமம், வரி நிலுவை இருக்கிறதா? என சரிபார்த்தனர்.
இந்த சோதனையின் போது ஓட்டுனர் உரிமம், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் இயக்கிய 6 பேரின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. 6 பேரும் சாலை விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் கோர்ட்டில் அபராதம் செலுத்திய பிறகே வாகனங்கள் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story