உக்ரைன் மீதான போரை நிறுத்தக்கோரி சென்னையில் அமைதி பேரணி
உக்ரைன் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி அன்னை தெரசா தொண்டு அறக்கட்டளை சார்பில் சென்னையில் நேற்று அமைதி பேரணி நடந்தது.
உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்த வேண்டும், மனித உயிர்கள் பலியாவதை தடுத்திட வேண்டும், அணு ஆயுத போர் வராமல் தடுத்திட வேண்டும், பொருளாதார பேரழிவு ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி அன்னை தெரசா தொண்டு அறக்கட்டளை சார்பில் சென்னையில் நேற்று அமைதி பேரணி நடந்தது.
இந்த பேரணிக்கு அறக்கட்டளை நிறுவனர் ஜி.கே.தாஸ் தலைமை தாங்கினார். அறங்காவலர் ஏ.சேவியர் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பேரணியின்போது உலக அமைதியை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி சென்றனர். இந்த அமைதி பேரணி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தொடங்கி லேங்க்ஸ் கார்டன் சாலை சந்திப்பு அருகே நிறைவடைந்தது.
Related Tags :
Next Story