மோட்டாருடன் பொருத்தப்பட்ட வாட்டர்ஹீட்டர் வெடித்து சிதறியது
ெவந்நீர் காய வைக்க முயன்றபோது மோட்டாருடன் பொருத்தப்பட்ட வாட்டர்ஹீட்டர் வெடித்து சிதறியது
வந்தவாசி
வந்தவாசி-ஆரணி சாலையில் முத்துநகர் பகுதியில் வசிப்பவர் பாபு. இவரின் மனைவி தனலட்சுமி.
இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். பாபு மற்றும் மனைவி தனலட்சுமி வேலைக்கு சென்று விட்டனர்.
அவர்கள் குளிப்பதற்கு சுடுநீர் காய வைப்பதற்காக ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தி வந்தனர்.
இன்று வீட்டில் இருந்த பிள்ளைகள் மோட்டார் பொருத்தப்பட்ட வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தி சுடுநீர் காய வைக்க முயன்றனர்.
அப்போது வாட்டர் ஹீட்டருடன் கூடிய மோட்டாா் வெடித்து சிதறியது. அதில் வீடு முழுவதும் புகை மண்டலமாகியது. பிள்ைளகள் அலறி அடித்து வெளிேய ஓடினர்.
உடனே வந்தவாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். வீரர்கள் விரைந்து சென்று வெடித்து சிதறிய வாட்டர் ஹீட்டரை அப்புறப்படுத்தினர். இதனால் வீட்டில் இருந்த பிள்ளைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Related Tags :
Next Story