2024-ல் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்-தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு
மராட்டியத்தில் 2024-ல் பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் 2024-ல் பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மோடியின் மேஜிக்
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பஞ்சாப் தவிர உத்தரபிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பிடித்து உள்ளது. இந்தநிலையில் இந்த தேர்தல் வெற்றி குறித்து மராட்டிய சட்டசபை வளாகத்தில் மாநில எதிர்க்கட்சி தலைவரும், கோவா மாநில பா.ஜனதா ேதர்தல் பொறுப்பாளருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
4 மாநில ேதர்தல் முடிவுகள் நாட்டில் நரேந்திர மோடி தான் ஒரே தலைவர் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசத்தில் 25 கோடி மக்கள் உள்ளனர். அங்கு 37 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்து உள்ளது. மோடியின் மேஜிக் ஆளுங்கட்சியின் மீதான மக்களின் அதிருப்தியை, ஆதரவாக மாற்றி உள்ளது.
2024-ல் ஆட்சி
தற்போது மராட்டியம் ஆட்சி அதிகார மாற்றத்தை காண வேண்டிய நிலையில் உள்ளது. 2024-ல் பா.ஜனதா மராட்டியத்தில் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை அமைக்கும். தற்போது மும்பை மாநகராட்சி தேர்தல் தான் எங்கள் இலக்கு. ஊழல் கும்பலிடம் இருந்து மாநகராட்சியை மீட்க விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வழக்கமாக மாநில பா.ஜனதா தலைவர்கள் மராட்டியத்தில் விரைவில் மகாவிகாஸ் அகாடி அரசு கவிழ்ந்துவிடும் என கூறுவார்கள். இந்தநிலையில் மராட்டியத்தில் 2024-ல் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story