சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில் பேரறிவாளன் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்


சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில்  பேரறிவாளன் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்
x
தினத்தந்தி 11 March 2022 7:02 PM IST (Updated: 11 March 2022 7:02 PM IST)
t-max-icont-min-icon

பரோலில் வந்த பேரறிவாளனுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் சென்னை புழல்சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஜோலார்பேட்டை

பரோலில் வந்த பேரறிவாளனுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் நேற்று சென்னை புழல்சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பேரறிவாளனுக்கு ஜாமீன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் பரோலில் வந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேேட்டையில் உள்ள அவருடைய வீட்டில் தங்கியிருந்தார். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் முதல் தற்போது வரை பேரறிவாளனுக்கு சுமார் 9 முறை பரோல் வழங்கப்பட்டு வீட்டிலேயே தங்கியிருந்தார்.

மேலும் அவருடைய தாயார் அற்புதம்மாள், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்திருந்தார். சுப்ரீம் கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக 31 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்
அதைத்தொடர்ந்து பரோலில் வந்திருந்கத பேரறிவாளன் பரோலை ரத்து செய்ய வேலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார், பேரறிவாளனை புழல் சிறைக்கு அழைத்து சென்றனர். சென்னை புழல் சிறைக்கு சென்று பரோலை ரத்து செய்த பின் பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வருவார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
=====

Next Story