கும்மிடிப்பூண்டி அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவிகள் உள்பட 7 பேர் காயம்
கும்மிடிப்பூண்டி அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 6 பள்ளி மாணவிகள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.
ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜகண்டிகை கிராமத்தில் இருந்து நேற்று காலை பள்ளி மாணவிகள் சிலர் ஷேர் ஆட்டோ மூலம் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை மாநெல்லூரை சேர்ந்த லோகன்(வயது 44) என்பவர் ஓட்டிச்சென்றார்.
நாகராஜகண்டிகை கிராமத்திற்கும் காயலார்மேடு கிராமத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் எதிர்பாரத விதமாக சாலையோரம் அந்த ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துகுள்ளானது.
காயம்
இதில் கால் உடைந்த நிலையில் ஆட்டோ டிரைவர் லோகன் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளான ஜனனி (17), பாரதி (16), நிர்மலா (17) உள்பட 6 பேர் லேசான காயங்களுடன் தப்பினர். அவர்கள் அனைவருக்கும் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் பள்ளிக்கு சென்றனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story