மோகனூர், எருமப்பட்டி பகுதிகளில் தேசிய ஊரக வளர்ச்சி திட்டக்குழு தலைவர் ஆய்வு


மோகனூர், எருமப்பட்டி பகுதிகளில் தேசிய ஊரக வளர்ச்சி திட்டக்குழு தலைவர் ஆய்வு
x
தினத்தந்தி 11 March 2022 7:46 PM IST (Updated: 11 March 2022 7:46 PM IST)
t-max-icont-min-icon

மோகனூர், எருமப்பட்டி பகுதிகளில் தேசிய ஊரக வளர்ச்சி திட்டக்குழு தலைவர் ஆய்வு செய்தார்.

மோகனூர்:
திட்டக்குழு தலைவர் ஆய்வு
மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் இணை பேராசிரியரும், திட்டக்குழு தலைவருமான சின்னத்துரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் அரூர் ஊராட்சியில் ஈச்சங்கோவில்பட்டியில் உள்ள பல வகையான மரக்கன்று நடுதல் மற்றும் பாரம்பரிய கசிவுநீர் குட்டை, ஆலம்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகை தோட்டம் ஆகியவற்றை பார்வையிட்டு, அதன் பராமரிப்பு முறைகளை ஆய்வு செய்தார்.
மேலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தரவு சேகரிப்பு மற்றும் கள ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட திட்ட இயக்குனர் வடிவேல், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் கலையரசு, மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி மற்றும் ஊராட்சி மன்ற செயலர் கருப்பண்ணன் மற்றும் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
குறைகள் கேட்பு
இதேபோல் எருமப்பட்டி அருகே உள்ள வடவதூர் ஊராட்சி மற்றும் வரகூர் ஊராட்சியில் கிராம வளர்ச்சி திட்டங்களை திட்டக்குழு தலைவர் சின்னத்துரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணாளன், பிரபாகரன் மற்றும் உதவி பொறியாளர் குணசேகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமலதா, ரோகிணி, வரகூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசம், வடவதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி, ஊராட்சி செயலாளர்கள் வினோத் குமார், செந்தில், வார்டு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கதினர், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story