நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி-நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது


நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி-நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது
x
தினத்தந்தி 11 March 2022 7:46 PM IST (Updated: 11 March 2022 7:46 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் காலியாக உள்ள 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் விவரத்தினை onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நேரில் தொடர்பு கொண்டோ தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story