நீரேற்று நிலையங்களில் திருச்செங்கோடு நகராட்சி தலைவர் ஆய்வு
நீரேற்று நிலையங்களில் திருச்செங்கோடு நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு நகராட்சி பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் இருந்து ஆவத்திபாளையம் நீரேற்று நிலையம் மூலம் 60 லட்சம் லிட்டர் தண்ணீரும், புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து 80 லட்சம் லிட்டர் தண்ணீரும் பெறப்படுகிறது. இந்த நீரேற்று நிலையங்களை திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் வசிக்கும் ஒரு நபருக்கு 90 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதனை 2 நீரேற்று நிலையங்கள் மூலம் பெற்று நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. கோடைக்கால குடிநீர் தேவையை சமாளிக்க போதுமான அளவு நீர்வரத்து உள்ளது. ஆனாலும் பழைய குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் வினியோகத்தில் சிறு தடங்கல் ஏற்படுகிறது. புதிய குழாய்கள் அமைக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசிடம் இருந்து நிதி பெற்று குழாய்கள் அமைக்கப்படும் என்றார். இந்த ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story