பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 March 2022 7:46 PM IST (Updated: 11 March 2022 7:46 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

சேந்தமங்கலம்:
9-ம் வகுப்பு மாணவன்
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சலியன்-மல்லிகா தம்பதியினர். இவர்கள் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துகாப்பட்டியில் தங்கி, அங்குள்ள செங்கல் சூளையில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் இருந்தனர்.
இதில் 2-வது மகனான மணிகண்டன் (வயது 14) அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக மணிகண்டன் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சலியன், மல்லிகா அவனை திட்டி, கண்டித்ததாக தெரிகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மணிகண்டன், நேற்று செங்கல் சூளை அருகே உள்ள புளிய மரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சலியன், மல்லிகாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து மணிகண்டனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
சேந்தமங்கலம் போலீசார் விரைந்து சென்று, மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவன் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால், மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story