மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு


மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 11 March 2022 7:51 PM IST (Updated: 11 March 2022 7:51 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கே.வி.கே.சாமிநகரை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் செல்வக்குமார் (வயது 20). இவர் நேற்று முன்தினம் இரவு சிலுவைப்பட்டியை சேர்ந்த தாமஸ் எடிசன் என்பவருடன் சேர்ந்து தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ள ஒரு கடையில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது மின்விளக்கு அமைக்க முயன்றாராம். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் உடல் கருகிய செல்வக்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story