தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 5 இலங்கை மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்


தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 5 இலங்கை மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 11 March 2022 8:12 PM IST (Updated: 11 March 2022 8:12 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியிலுள்ள இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 5 இலங்கை மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கன்னியாகுமரியில் இருந்து 120 கடல் மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள் ஒரு இலங்கை படகு அத்துமீறி நுழைந்து இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக அந்த படகில் இருந்த இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த ஜூட் சம்பத் பெர்னாண்டோ (வயது 41), வர்ணகுல சூரிய வொர்பெட் கின்ஸ்லி பெர்னாண்டோ (41), ரணில் இந்திகா (37), யுவான் பிரான்சிஸ் சுனில் பிஹாரேரு (55), அசங்கா ஆண்டன் (40) ஆகிய 5 பேரை கைது செய்து தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிபட்ட படகின் என்ஜினில் கடலுக்குள் கிடந்த மீன் வலை சிக்கியதால் படகு பழுதானதாகவும், தொடர்ந்து நீரோட்டம் மற்றும் காற்றின் வேகத்தில் இந்திய எல்லைக்குள் வந்து விட்டதாகவும் கைதான மீனவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கைதான 5 இலங்கை மீனவர்களையும் போலீசார் நேற்று ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை சென்னை புழல் ஜெயிலில் அடைப்பதற்காக அழைத்து சென்றனர்.

Next Story