மாநில கண்காட்சியில் பொருட்கள் இடம்பெற பதிவு செய்யலாம் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு அறிவுரை


மாநில கண்காட்சியில் பொருட்கள் இடம்பெற பதிவு செய்யலாம் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு அறிவுரை
x
தினத்தந்தி 11 March 2022 9:28 PM IST (Updated: 11 March 2022 9:28 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடைபெறும் மாநில கண்காட்சி யில் பொருட்கள் இடம்பெற பதிவு செய்யலாம் என்று மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

ஊட்டி

சென்னையில் நடைபெறும் மாநில கண்காட்சி யில் பொருட்கள் இடம்பெற பதிவு செய்யலாம் என்று மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

விற்பனை கண்காட்சி

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் கோடை கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநில அளவிலான சுய உதவிகுழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி வருகிற ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் மகளிர் திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் மகளிர் சுய உதவிகுழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக மாவட்ட, மாநில, தேசிய அளவில் பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பதிவு செய்யலாம்

அதன்படி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக பதிவு செய்து உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் கோடை கொண்டாட்டத்துக்கு தொடர்புடைய பொருட்கள் உற்பத்தி செய்து இருந்தால், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழுவின் தீர்மான நகல், உதவிக்குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மாதிரி, உற்பத்தியாளரின் ஆதார் அட்டை, உற்பத்தி, விற்பனை செலவினம் மற்றும் விலை நிர்ணயம் குறித்த விவரத்துடன் ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் அலுவலகத்தில் நாளை மறுநாளுக்குள் (14-ந் தேதி) பதிவு செய்ய வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story