குடகனாற்றில் மிதந்த ஆசாமியால் பரபரப்பு
திண்டுக்கல் அருகே குடகனாற்றில் மிதந்த ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டி குடகனாற்றில் நேற்று மதியம் 40 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் வேட்டி அணிந்தபடி நீண்ட நேரமாக மிதந்தபடி கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, ஆற்றில் ஒருவர் இறந்த நிலையில் பிணமாக மிதப்பதாக வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆற்றில் மிதந்தவரை காண கிராம மக்கள் திரண்டனர்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள், ஆற்றில் இறங்கி ஆசாமியை மீட்க முயன்றனர். அதுவரையில் ஆற்றில் பிணம்போல் மிதந்த ஆசாமி, தீயணைப்பு படைவீரர்கள் வருவதை பார்த்ததும், அங்கிருந்து தப்பி நீந்தியபடி ஆற்றின் மறுகரைக்கு சென்று மறைந்துகொண்டார். ஆனால் அவர் யார்? எதற்காக ஆற்றில் மிதந்தார்? என்பது தெரியவில்லை.
இருப்பினும் அந்த ஆசாமியின் செயலை கண்டு கிராம மக்களும், தீயணைப்பு படைவீரர்களும் வெறுப்படைந்தாலும், அவர் உயிரோடு தான் இருக்கிறார் என்பதை தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story