விக்கிரவாண்டி அருகே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்தது


விக்கிரவாண்டி அருகே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 11 March 2022 10:04 PM IST (Updated: 11 March 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்தது போக்குவரத்து பாதிப்பு

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அருகே உள்ள முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு திருச்சி-சென்னை சாலையில் சிந்தாமணி அருகே வந்தபோது திடீரென டிராக்டர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரில் இருந்த கரும்புகள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் பொதுமக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த கரும்புகளை உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story