தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள்
தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக, வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூர்
தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக, வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழிப்புணர்வு போட்டி
இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ‘எனது வாக்கு எனது எதிர்காலம், ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளை தொடங்கி உள்ளது. இதில் அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்ளலாம்.
வினாடி-வினா போட்டி, வாசகம் எழுதும் போட்டி, பாட்டு பாடும் போட்டி, காணொலி காட்சி உருவாக்கும் போட்டி, விளம்பர பட வடிவமைப்பு போட்டி ஆகிய 5 பிரிவுகளில் நடத்தப்படுகிறது.
அனைத்து போட்டியும் கருப்பொருளை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும். பாரம்பரிய இசைப்பாடல்கள், தற்கால பாடல்கள், ராப் பாடல்கள் போன்ற வடிவத்தில் புதிய பாடல்களை உருவாக்கி இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
போட்டியில் கலந்து கொள்பவர்கள் விரிவான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை https://ecisveep.nic.in/contest என்ற வலைதளத்தில் பார்வையிடலாம். போட்டிகள் தொடர்பான பதிவுகள் மற்றும் அதனுடைய விவரங்களை voter-contest@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் போட்டியின் பெயர் மற்றும் பிரிவு ஆகியவற்றை மின்னஞ்சலின் பொருள் பகுதியில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
15-ந் தேதிக்குள்...
போட்டி தொடர்பான அனைத்து பதிவுகளும் பங்கேற்பாளர்களின் விவரங்களுடன் இணைத்து வருகிற 15-ந் தேதிக்குள் voter-contest@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story