தர்மபுரி அருகே ஏஐடியூசி தொழிற்சங்க கூட்டம்


தர்மபுரி அருகே ஏஐடியூசி தொழிற்சங்க கூட்டம்
x
தினத்தந்தி 11 March 2022 10:28 PM IST (Updated: 11 March 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே ஏஐடியூசி தொழிற்சங்க கூட்டம் நடந்தது.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கட்டுமான பணியில் ஈடுபடும் பெண்களுக்கான ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க கூட்டம் தொழிலாளர்கள் சங்க கூட்டம் தர்மபுரி அருகே உள்ள பி. அக்ரகாரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் முனியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜயா வரவேற்றார். அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் திலகமணி, மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் கமலாமூர்த்தி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட நிர்வாகிகள் மாதேஸ்வரன், மணி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியிடங்களில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாலியல் ரீதியான தொல்லைகளில் ஈடுபடுவோரை உரிய கண்காணிப்பின் மூலம் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து கட்டுமான தொழிலில் உரிய வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். கட்டுமான வேலையில் ஈடுபடும் பெண்களுக்கு குறைந்தபட்ச சட்ட கூலியை அமல்படுத்த வேண்டும், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளாட்சி துறையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இளம் வயது திருமணங்களை கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் பெண் கட்டுமான தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story