புனேயில் மருத்துவ நகரம்- பட்ஜெட்டில் அறிவிப்பு
எல்லா விதமான நோய்களுக்கும் ஒரே இடத்தில் பொதுமக்கள் சிகிச்சை பெறும் வகையில் புனேயில் 'மெடிசிட்டி' எனப்படும் மருத்துவ நகரம் அமைக்கப்பட உள்ளது.
மும்பை,
எல்லா விதமான நோய்களுக்கும் ஒரே இடத்தில் பொதுமக்கள் சிகிச்சை பெறும் வகையில் புனேயில் 'மெடிசிட்டி' எனப்படும் மருத்துவ நகரம் அமைக்கப்பட உள்ளது.
மருத்துவ நகரம்
மராட்டிய மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் புனே அருகில் பொதுமக்கள் எல்லா வகையான நோய்களுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை பெறும் வகையில் ‘மெடிசிட்டி' மருத்துவ நகரம் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்ஜெட்டில், " மாநில அரசு புனே நகரம் அருகில் 300 ஏக்கர் பரப்பில் நவீன வசதிகளுடன் ‘இந்திராயானி மெடிசிட்டி' மையத்தை அமைக்க உள்ளது. இதில் ஆஸ்பத்திரிகள், மருத்துவ ஆராய்ச்சி மையம், உடல்நல மற்றும் பிசியோதெரபி மையங்கள் இடம்பெறும். ஒரே இடத்தில் அனைத்து வகையான சிகிச்சைகளும் பெறக்கூடிய நாட்டின் முதல் மருத்துவ காலனியாக இது இருக்கும்" என கூறப்பட்டுள்ளது.
மருத்துவ மேல்படிப்பு
இதுபோன்ற மருத்துவ மையங்கள் நாட்டின் சில பகுதிகளில் தனியாரால் நடத்தப்பட்டு வருகின்றன என அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
இதேபோல மும்பை செயின்ட் ஜார்ஜ் ஆஸ்பத்திரி, நாக்பூர் அம்பேத்கர் மருத்துக கல்வி நிறுவனத்தில் மருத்துவ மேல்படிப்பு மையம் அமைக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story