பள்ளிகொண்டா பகுதியில் மணல் திருட்டை தடுக்க ராட்சத பள்ளம்
பள்ளிகொண்டா பகுதியில் மணல் திருட்டை தடுக்க ராட்சத பள்ளம் தோண்டப்பட்டது.
அணைக்கட்டு
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட முக்கிய பகுதிகளான இறைவன்காடு, கந்தனேரி, வெட்டுவானம், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாலாற்றுப் படுகையிலிருந்து மணல் கடத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் பாலாற்றில் கரைபுரண்டுவெள்ளம் ஓடியது.
தற்போது வெள்ளம் குறைந்து விட்டதால் கரையோரங்களில் மணல் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, மணல் கடத்தும் முக்கிய பாதைகளின் நடுவே சுமார் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி வழியை மூடி உள்ளார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி கூறுகையில் தற்போது பாலாற்றில் வெள்ளம் குறைந்துவிட்டதால் மணல் கொள்ளையர்கள் முக்கிய பாதைகள் வழியாக மணல் கடத்துவதை தடுக்க ஆங்காங்கே மணல் கடத்தும் பாதைகளில் பொக்லைன் எந்திரம் மூலம் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி இருப்பதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story