ரெயிலில் ஏற முயன்றபோது குழந்தை கண்எதிரே பிளாட்பாரத்தில் விழுந்த பெண். அபாய சங்கிலியை இழுத்து ெரயிலை நிறுத்தியதால் உயிர்தப்பினார்

ரெயிலில் ஏற முயன்றபோது குழந்தை கண்எதிரே பிளாட்பாரத்தில் விழுந்த பெண். அபாய சங்கிலியை இழுத்து ெரயிலை நிறுத்தியதால் உயிர்தப்பினார்
x
தினத்தந்தி 11 March 2022 11:08 PM IST (Updated: 11 March 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் ஏறியபோது பிளாட்பாரத்தில் பெண் தவறி விழுந்தார். சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தியதால் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

ஜோலார்பேட்டை

ஆம்பூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் ஏறியபோது பிளாட்பாரத்தில் பெண் தவறி விழுந்தார். சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தியதால் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

நிலைதடுமாறி விழுந்தார்

சென்னையிலிருந்து கர்நாடக மாநிலம் மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் 1.35 சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று மாலை 4.50 மணிக்கு ஆம்பூர் ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.

அப்போது அங்கு தயாராக நின்ற பயணிகள் ரெயிலில் ஏறிக்கொண்டிருந்தனர். மைசூர் செல்வதற்காக காத்திருந்த  அஸ்கர் அகமத் என்பவரின் மனைவி மாஷா (வயது 22), அரினா (22) ஆகிய பெண்கள் 6 வயது குழந்தையுடன் முன்பதிவு செய்த எஸ் 5 பெட்டியை கண்டுபிடித்து ஏறுவதற்காக வந்தனர்.

முதலில் அரினா ஏறியபிறகு மாஷா தனது குழந்தையை ஏற்றினார். மாஷா ஏறியபோது ரெயில் நகர தொடங்கியது. இதனால் நிலைதடுமாறிய அவர் பிளாட்பாரத்தில் தவறி விழுந்தார். இதனை பார்த்த சக பயணிகள் கூச்சலிட்டவாறு அபாய சங்கிலியை இழுத்தனர். இதனால் ரெயில் நிறுத்தப்பட்டது. 

மீட்பு

ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் அபாய சங்கிலி இழுக்கப்பட்ட பெட்டிக்கு வந்து பிளாட்பாரத்தில் விழுந்த மாஷாவை மீட்டனர். நல்லவேளையாக அவர் பிளாட்பாரத்தில் விழுந்ததாலும் ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதாலும் காயமின்றி தப்பினார்.

பின்னர் ரெயில்வே போலீசார் அவரை ரெயிலில் ஏற்றி அமரவைத்தனர். அதற்குள் என்ஜின் டிரைவர்கள் அங்கு வந்து அபாய சங்கிலி இழுக்கப்பட்டதை சரி செயதனர். பின்னர் 15 நிமிடம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story