துணை இயக்குனர் அலுவலக கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும்
துணை இயக்குனர் அலுவலக கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும்
வெளிப்பாளையம்
நாகையில் மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் அலுவலகம் காடம்பாடி, பப்ளிக் ஆபீஸ் சாலை உள்ளது. இந்த அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2019- 20-ம் ஆண்டில் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து நாகை - நாகூர் சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள இடத்தில் மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.இந்த கட்டிடப்பணி மிகவும் மெதுவாக ஆமை வேகத்தில் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே தோட்டக்கலை துறை துணை இயக்குனர் அலுவலக கட்டிட பணியை விரைந்து முடித்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story