கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த மாற்றுத்திறனாளி தம்பதி கடலூரில் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த மாற்றுத்திறனாளி தம்பதி கடலூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 11 March 2022 11:14 PM IST (Updated: 11 March 2022 11:14 PM IST)
t-max-icont-min-icon

கடலூில் கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த மாற்றுத்திறனாளி தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது


கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை மாற்றுத்திறனாளி தம்பதியினர், தங்களது 2 பெண் குழந்தைகளுடன் வந்தனர். அப்போது அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோல் கேனை எடுத்தனர். 

இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களிடம் இருந்த பெட்ரோல் கேனை பிடுங்கினர். பின்னர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் விருத்தாசலம் பூதாமூரை சேர்ந்த விஜயகுமார், இவரது மனைவி லதா என்பதும், மாற்றுத்திறனாளிகளான இருவரும் தங்கள் கிராமத்தில் பாதி அளவு வீடு கட்டி உள்ளதாகவும், 

மேற்படி தொகுப்பு நிதியில் இருந்து வீடு கட்டி தரக்கோரியும், இரண்டு பெண் குழந்தைகளுக்கும் உதவித் தொகை வழங்கக்கோரியும் கலெக்டரிடம் கோரிக்கை விடுக்க வந்ததாக தெரிவித்தனர்.


 இதையடுத்து போலீசார், கலெக்டரிடம் மனு அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இனி இதுபோன்று பெட்ரோல் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வரக்கூடாது என்றும் கூறி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story