பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா
திருக்கோவிலூரில் பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் கோவில் மயானக்கொள்ளை விழாவையொட்டி அம்மனுக்கு காப்பு கட்டுதல், சக்தி கரகத்துடன் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி, விநாயகர் பூஜை, மகேஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் மயானக்கொள்ளை விழா நடந்தது.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவமும், இரவு வீதி உலா காட்சியும், கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள், உபயதாரர்கள், கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story