சோழத்தரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


சோழத்தரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 March 2022 11:36 PM IST (Updated: 11 March 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

சோழத்தரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.


சேத்தியாதோப்பு, 

சேத்தியாத்தோப்பு அருகே சோழத்தரம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கும்பகோணம்-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும், 

சாலை பணிக்காக வானமாதேவி, சோழத்தரம் பகுதியில் வீடுகள், நிலங்களை இழந்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சோழத்தரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கு மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற சோழத்தரம் போலீசார், அங்கு மறியலில் ஈடுபட்டவர்களில் 10 பேரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

Next Story