பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி


பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி
x
தினத்தந்தி 11 March 2022 11:37 PM IST (Updated: 11 March 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே நாககுப்பம் குறுவள மையத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான கருத்தாளர் பயிற்சி நடந்தது.

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே நாககுப்பம் குறுவள மையத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான கருத்தாளர் பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மோகனரங்கன் தலைமை தாங்கினார். சின்னசேலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அன்புமணி மாறன் முன்னிலை வகித்தார். 

இதில் குழந்தைகளின் உரிமைகள், இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டம், பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல், பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம் குறித்து ஆசிரியர் பயிற்றுனர் ராஜா, ஆசிரியர் தீபா ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் குறுவள மையதிற்குட்பட்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் 70 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

Next Story