பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்


பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 11 March 2022 11:37 PM IST (Updated: 11 March 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், அதனை எவ்வாறு எதிர்கொண்டு, தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு கூட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

மூங்கில்துறைப்பட்டு, 

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், அதனை எவ்வாறு எதிர்கொண்டு, தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு கூட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் சித்ராதாஸ் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்னக்கிளி வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் சவுகத் அலி மற்றும் குர்ஷித் பாஷா கலந்து கொண்டு பேசினர்.

அப்போது குழந்தை திருமணத்தை தடுப்பது, பள்ளிக்கு வரும் நேரம் மற்றும் செல்லும் நேரங்களில் ஏதாவது மாணவிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டாலோ அல்லது ஆண்களால் ஏதேனும் சீண்டல்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்  போன்ற பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Next Story