தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 11 March 2022 11:38 PM IST (Updated: 11 March 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா செல்லும் வழியில் கள்ளத்தெரு உள்ளது.  இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இதனை கால்நடைகள் உண்பதினால் அவற்றின் உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றிவிட்டு இப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கள்ளத்தெரு, திருச்சி. 

தேங்கி நிற்கும் கழிவுநீர் 
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தாத்தையங்கார்பேட்டை முதல் நெசவாளர் காலனி 1-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  நெசவாளர் காலனி, திருச்சி. 

பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை பணி 
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வாளசிராமணி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக இருந்ததால் சாலை பெயர்க்கப்பட்டு, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளன. ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ள நிலையில் பணி நடைபெறாமல் கடந்த 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வாளசிராமணி, திருச்சி. 

மரக்கிளைகளில் உரசும் மின்கம்பிகள் 
திருச்சி  காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து பால்பண்ணை செல்லும் சாலையில் ஒரு தனியார் கடை அருகில் செல்லும் மின்கம்ப கம்பிகள், அங்கு வரிசையாக இருக்கும் மரங்களில் உரசியபடி மரக்கிளைகளில்  புகுந்து செல்கின்றன. இதனால் மரங்களில் மின்சாரம் பாய்ந்து, விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி.

Next Story