வரத்து அதிகரிப்பால் ஆடுகள் விலை குறைந்தது
கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மூலனூர்
கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
போதிய விலை இல்லை
தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஆகும். இந்த சந்தை வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இந்த வாரம் ஆடுகள் வரத்து அதிக அளவில் இருந்தது. இதனால் விவசாயிகள் ஆடுகளை அதிக அளவில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சந்தையில் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் ஆடுகளை திருப்பி கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கவலை
இதனால் இந்த வாரம் ஆடுகள் வரத்து அதிகமானதால் ஆடுகளின் விலை வெகுவாக குறைந்தது. சென்ற வாரம் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ. 6 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் அதே ஆடு ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. இந்த வாரம் ஆடுகளின் வரத்து அதிகமானதால் வியாபாரிகளின் வரத்து குறைந்தாலும் ஆடுகளின் விலை வெகுவாக குறைந்தது என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொருத்தே நிர்ணயிக்கப்படும் அதனடிப்படையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த வாரத்தில் ரூ.100 குறைந்து ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு சுமார் ரூ.5ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.
Related Tags :
Next Story