நொய்யல் ஆற்றில் நுரையுடன் கழிவுநீர் பாய்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி


நொய்யல் ஆற்றில் நுரையுடன் கழிவுநீர் பாய்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 11 March 2022 11:56 PM IST (Updated: 11 March 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

நொய்யல் ஆற்றில் நுரையுடன் கழிவுநீர் பாய்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்

திருப்பூர்
நொய்யல் ஆற்றில் நுரையுடன் கழிவுநீர் பாய்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
நொய்யலில் கழிவுநீர்
பின்னலாடை நகரான திருப்பூரின் மையப்பகுதியில் நொய்யல் ஆறு செல்கிறது. இது தற்போது கழிவுநீர் செல்லும் ஆறாக மாறிவிட்டது. பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் சாயப்பட்டறை நிறுவனங்கள் அதிகம் உள்ளன. கழிவுநீரை நொய்யல் ஆற்றில் திறந்து விடாமல் சுத்திகரிப்பு செய்து விட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
 பெரும்பாலான நிறுவனங்கள் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வரும் நிலையில், சில நிறுவனங்கள் சாயக்கழிவுநீரை நொய்யலில் திறந்து விடும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.
பொதுமக்கள் அதிர்ச்சி
திருப்பூர் தெற்கு ரோட்டரி மின் மயானம் அருகே நொய்யல் ஆற்றில் நுரையுடன் தண்ணீர் பாய்ந்தது. வெள்ளை நுரை பொங்க தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. ரசாயனப்பொருட்கள் கழிவுநீருடன் சேர்ந்தால் மட்டுமே இவ்வாறு நுரை பொங்கும். அதனால் சாயக்கழிவுநீரை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டதாக அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.  இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story