கோமளாம்பிகை கோவிலில் தீமிதி திருவிழா


கோமளாம்பிகை கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 12 March 2022 12:02 AM IST (Updated: 12 March 2022 12:02 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி கோமளாம்பிகை கோவிலில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

சீர்காழி:
சீர்காழி கோமளாம்பிகை கோவிலில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
மகாகாளியம்மன் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கீழவீதியில் கோமளாம்பிகை என்னும் மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 83-ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் காளியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதனையடுத்து நேற்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு காலை 9 மணி அளவில் சீர்காழி சட்டநாதர்கோவிலில் இருந்து பால் காவடி, அலகு காவடி, பறவை காவடிகளுடன் கரகம் புறப்பட்டு வாணவேடிக்கை மேளதாளங்கள் முழங்க தேர் தெற்கு வீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. 
தீமிதி உற்சவம்
அதனை தொடர்ந்து காளியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 
அதனைத் தொடர்ந்து இரவு 6 மணி அளவில் கோவிலில் முன்பு காளி ஆட்டத்துடன் தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். தொடர்ந்து இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் வீதிஉலா நடைபெற்றது. 
போக்குவரத்து மாற்றம்
இதனையடுத்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், 14-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 15-ந் தேதி மதுரைவீரன் பூஜையும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் தலைமையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் உள்பட ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். மேலும் தீமிதி திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

Next Story