3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
ஆவூர் அருகே பட்டப்பகலில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிச் சென்றனர்
ஆவூர்
விராலிமலை தாலுகா, பேராம்பூர் ஊராட்சிக்குட்பட்ட கல்லுப்பட்டி மேலக்காட்டில் பன்னீர்செல்வம்(வயது 38), ஆறுமுகம் என்பவரின் மகன்கள் ராஜேந்திரன்(35), மதியழகன்(31) ஆகிய 3 பேரின் வீடுகள் அருகருகே உள்ளன. இதில் ராஜேந்திரன் புதுக்கோட்டையில் குடியிருந்து வருவதால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது.
பன்னீர்செல்வம், மதியழகன் ஆகிய இருவரும் நேற்று காலை தங்களது வீடுகளை பூட்டிவிட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலை வீடு திரும்பியபோது பன்னீர்செல்வம், மதியழகன், ராஜேந்திரன் ஆகிய 3 பேரின் வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.
உள்ளே சென்று பார்த்தபோது பன்னீர்செல்வம் வீட்டில் ஒரு கிராம் தங்க தோடு, ரூ.2ஆயிரம், மதியழகன் வீட்டில் 6 கிராம் நகை, ரூ.25 ஆயிரம் ஆகியவை திருடு போயிருந்தது. ராஜேந்திரன் வீட்டில் பணம், நகை எதுவும் இல்லாததால் துணிகளை கலைந்து போட்டு விட்டு தப்பிச் சென்றனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்த புகாரின்பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். இதேபோல நேற்று முன்தினம் பேராம்பூரில் தனியாக உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story