தவக்கால சிலுவைப்பாதை வழிபாடு
கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் தவக்கால சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.
விருதுநகர்,
கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் தவக்கால சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.
சிலுவைப்பாதை
விருதுநகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் தவக்கால சிலுவைப்பாதை வழிபாடுகள் மற்றும் திருப்பலியும் நடைபெற்றது.
கடந்த 2-ந் தேதி சாம்பல் புதன் தினத்துடன் 40 நாள் தவக்காலம் தொடங்கியது. நேற்று இரவு தவக்காலத்தின் 2-வது வெள்ளிக்கிழமை மாலை தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெற்றது. சிலுவை சுமந்தும், நோன்பிருந்தும் இதில் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் புனித இன்னாசியார் ஆலயத்தில் மறைவட்ட அதிபரும், பங்குத்தந்தையுமான பெனடிக்ட் அம்புரோஸ் அடிகளார், துணை பங்குத்தந்தை செபஸ்டியான் அடிகளார் தலைமையில் தவக்கால சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. விருதுநகர் பாண்டியன் நகர் புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஸ்டீபன் சேவியர் அடிகளார், எஸ்.எப்.எஸ். மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆரோக்கியம் அடிகளார், பொருளாளர் மார்ட்டின் குமார் அடிகளார் ஆகியோர் தலைமையில் சிலுவைப்பாதை வழிபாடு மற்றும் திருப்பலி நடைபெற்றது.
சாத்தூர்
விருதுநகர் நிறைவாழ்வு நகர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை தாமஸ்வெனிஸ் அடிகளார் தலைமையிலும், விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகர் புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை அலெக்ஸ் ஞானராஜ் அடிகளார் துணை பங்குத்தந்தை மரிய பென்சிகர் அடிகளார் தலைமையிலும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
சாத்தூர் திருஇருதய ஆலயத்தில் பங்குத்தந்தை போதகர் மைக்கேல்ராஜ் அடிகளார் தலைமையிலும், சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் குழந்தை ஏசு ஆலயத்தில் பங்குத் தந்தை ஜெயராஜ் அடிகளார் தலைமையிலும், தவக்கால சிலுவைப்பாதை வழிபாடு மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதை தொடர்ந்து ஏப்ரல் 15-ந் தேதி புனித வெள்ளிக்கிழமையில் சிலுவைப்பாதை வழிபாடு 40-ம் நாள் தவக்கால வழிபாடுகளும் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story